வனப்பணியில் வனப்பணியாளர்களின் நிலை

வனப்பணியில் வனப்பணியாளர்களின் நிலை

வனத்துறை என்பது பொதுவாக ஒரு இன்றியமையாத துறை என அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. எனவே தான் தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக நாடு முழுவதும் மரம் வளர்ப்பது பற்றியும் அவற்றின் அவசியம் மற்றும் காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றைப்பற்றி யோசித்து அதற்கேற்றாற்போல் பல திட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தேவையான அளவு நிதியையும் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்க்கவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

பொதுமக்களுக்கும் மரம் வளர்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. எனவே தான் தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் பல நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தொடங்கியுள்ளனர்.

பலர் தங்களுடைய வீட்டு விசேஷங்களில் மரக்கன்றுகள் கொடுக்கும் நிலையை எடுத்துள்ளனர்.

சுமார் 10 -  15  வருடங்களுக்கு முன்னர் நாம் தண்ணீரை சாதாரணமாக எங்கும் குடித்தோம். ஆறுகள், ஓடைகள், கிணறுகள் என எங்கிருந்தும் தண்ணீரை குடித்து வாழ்ந்துவந்தோம். ஆனால் இன்று தண்ணீர் மாசுபட்டுள்ளதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தேடும் நிலையில் உள்ளோம்,

அதேபோன்று தற்போது காற்று மாசுபட்டுக்கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஆக்சிஜனுக்காக நாம் ஒரு சிலிண்டரை மாட்டிக்கொண்டு நடக்கவேண்டி இருக்கும். இவை அனைத்திற்கும் தேவை என்னவெனில் மரங்கள். மரங்கள் இல்லையேல் மனிதன் மட்டுமல்ல எந்த ஒரு ஜீவராசியும் இவ்வுலகில் இருக்காது. இவ்வுலகம் இன்றுபோல் என்றும் வாழ காடுகள் அதி்ல் உள்ள உயிரினங்கள் முக்கியமாகும். இயற்கையோடு இணைந்து வாழவேண்டும். இவ்வுலகம் அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொதுவானது. வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாக்கும் ஒரு துறை எதுவெனில் வனத்துறைதான். அனைத்து உயிர்களும் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை பொதுவாக மரங்கள் தான் உற்பத்தி செய்கின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை மரங்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் பலர் மரங்களை சட்டத்திற்கு புறம்பாக வெட்டுவதும், வன உயிரினங்களை தங்களுடைய பொருளாதார தேவைக்காக சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுவதும் வேதனையான ஒன்றாகும்.

இவ்வாறு மரங்கள் மற்றும் காடுகளினால் மனிதஇனத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.

இந்த மரங்கள் மற்றும் வன உயிரினங்கள் அடங்கிய வனப்பகுதியை பாதுகாப்பதில் வனத்துறை பெரும்பங்காற்றுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் தற்போது பொதுமக்களில் ஒரு சிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக வனப்பகுதியை ஆக்கிரமிப்பது, வன உயிரினங்களை வேட்டையாடுவது, வனப்பகுதியில் உள்ள மண், மணல், கல் மற்றும் பலவற்றை சட்டத்திற்கு புறம்பாக எடுத்துச்செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஒருசில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் பல பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக பலரும் கூறிவரும் நிலையில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும்போது அங்கு பணிபுரியும் பணியாளர்கள் ஒருவித நெருக்கடிக்கு ஆளாகின்றனர். பொதுவாக வனத்தில் அதாவது காட்டில் புல், பூண்டு முதல் ஓங்கி வளர்ந்துள்ள மரங்கள் வரையும், சிறு புழு, பூச்சி முதல் மிகவும் பெரிய உயிரினமான யானைகள்வரை அனைத்துமே வாழவேண்டும் என்பதுதான் உலக நியதி. அவ்வாறு இருந்தால் மட்டுமே மனிதஇனம் நலமுடன் இருக்கமுடியும். உதாரணத்திற்கு தேனீ என்ற இனம் இல்லையென்றால் அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்குள் இந்த பூமியில் எந்த ஒரு உயிரினமும் இருக்காது என ஒரு ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. எனவே நாம் வாழும் பூமியானது மனித இனத்திற்கு மட்டுமே இல்லை. அனைத்திற்கும் பொதுவானதுதான் என்பதை மக்கள் உணரவேண்டும்.
அவ்வாறு உணர்ந்து செயல்படும்பட்சத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவையில்லாமல் போகும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
பொதுவாக சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு. நன்றி

மரம் வளர்ப்போம்                                                                        மண்வளம் காப்போம் 














No comments:

Post a Comment