Teak Wood (தேக்கு மரம்)

தேக்கு மரம் Teak Wood

தேக்கு மரம்
தேக்கு மரம் 1882 ம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டம் V வது ஆக்ட் அட்டவணையில் காணப்படும் ஒரு மரமாகும்.
எனவே தேக்குமரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வெட்டி எடுத்துச்செல்வதற்கு வனத்துறையின் அனுமதி படிவம் பெறவேண்டும்.

உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்று. இதன் தாவர அறிவியல் பெயர் டெக்டோனா கிரான்டிஸ் (Tectona grandis) ஆகும். கிரேக்க மொழியில் டெக்டன் என்றால் தச்சர் என பொருள்படும். அதே போன்று  டெக்டோனா என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. கிரான்டிஸ் என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம் என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மரம் ஓங்கி வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.


மூன்று வகையான தேக்கு மரங்கள் உள்ளன.

    டெக்டோனா கிராண்டிஸ் - (பொதுத் தேக்கு)
    டெக்டோனா ஹமில்டோனியா - (டாகத் தேக்கு)
    டெக்டோனா பிலிப்பினென்சிஸ் - (பிலிப்பைன் தேக்கு)


தேக்கு பயிரிட ஏற்ற நிலம்
இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் கடுங்களி நிலங்களும் மற்றும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர ஏற்றதல்ல. இம்மரம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.

மரத்தின் சிறப்பியல்புகள்
தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சார்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.
இம்மரம் ஒளி விரும்பி (Light demander ) ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால்தான் மரம் நல்ல முறையில் வளரும்.
தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும், 90 செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீ உயரமும் 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.


நடவு
விவசாய நிலத்தில் வரப்பு பகுதியில் 3 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். முழு பரப்பிலும் நடவு செய்யலாம். முழு நடவு (தோப்பு) எனில் 3மீ * 3மீ இடைவெளியில் நடவு செய்யலாம். வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளைவிட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும் நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.

பக்க கிளைகளை அகற்றுதல்
தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும் பக்க கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் கழித்துவிடவேண்டும்.

தேக்கு மரத்தோட்டத்தில் ஊடுபயிர்களாக சோளம், உளுந்து மற்றும் காய்கறிகள் போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.


பயன்
தேக்கு மரம் ஒரு உயர்தரமான மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம். மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.

Teak (Tectona grandis)

Teak (Tectona grandis) is a tropical hardwood tree species placed in the flowering plant family Lamiaceae. Tectona grandis is a large, deciduous tree that occurs in mixed hardwood forests. It has small, fragrant white flowers and large papery leaves that are often hairy on the lower surface. It is sometimes known as the "Burmese teak". Teak wood has a leather-like smell when it is freshly milled. It is particularly valued for its durability and water resistance, and is used for boat building, exterior construction, veneer, furniture, carving, turnings, and other small wood projects. Tectona grandis is native to south and southeast Asia, mainly India, Sri Lanka, Indonesia, Malaysia, Thailand, Myanmar and Bangladesh but is naturalised and cultivated in many countries in Africa and the Caribbean. Myanmar's teak forests account for nearly half of the world's naturally occurring teak. Molecular studies show that there are two centres of genetic origin of teak; one in India and the other in Myanmar and Laos. "CP teak" ("Central Province" teak) is a description of teak from the central states of India. "Nagpur teak" is another regional Indian teak. It produces small, white flowers arranged in dense clusters (panicles) at the end of the branches. Flowers contain both types of reproductive organs (perfect flowers)


  heartwood is yellowish in colour. It darkens as it ages. Sometimes there are dark patches on it. There is a strange scent in newly cut wood.

   sapwood is whitish to pale yellowish brown in colour. It can easily separate from heartwood.
    wood texture is hard and ring porous.
   
Tectona grandis was first formally described by Carl Linnaeus the Younger in his 1782 work Supplementum Plantarum. In 1975, Harold Norman Moldenke published new descriptions of four forms of this species in the journal Phytologia. Moldenke described each form as varying slightly from the type specimen: T. grandis f. canescens is distinguished from the type material by being densely canescent, or covered in hairs, on the underside of the leaf, T. grandis f. pilosula is distinct from the type material in the varying morphology of the leaf veins, T. grandis f. punctata is only hairy on the larger veins on the underside of the leaf, and T. grandis f. tomentella is noted for its dense yellowish tomentose hairs on the lower surface of the leaf.


4 comments:

  1. Caring for your outdoor furniture and cushions. ... Cleaning Your Teak Outdoor Furniture. If you prefer to keep your teak patio furniture at its original golden color ... take care of durability of chair

    ReplyDelete
  2. I think this is an informative post and it is very useful and knowledgeable. therefore, I would like to thank you for the efforts you have made in writing this article. jamb saws buying guide

    ReplyDelete
  3. Check for customer feedbacks and those people who were satisfied by their work. Compare prices between companies on top of the mentioned requisites of these tree removal services companies. Then, pick the right group for your needs. Tree Trimming Lincoln

    ReplyDelete