மலிவு விலை அங்காடி விண்ணப்பம் (Police Canteen Form)

 மலிவு விலை அங்காடி விண்ணப்பம் 

Form for Police Canteen

அமைச்சுப்பணியாளர்களுக்கும் மலிவு விலை அங்காடியில் பொருட்கள் வாங்கிக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மலிவு விலை அங்காடியினை பயன்படுத்திக்கொள்ள வனத்துறை சீருடைப்பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சுப்பணியாளர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சுப்பணியாளர்கள் சங்கம் மற்றும் அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் கடும் உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. அரும்பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 

அரசாணை

G.O. (Ms) No 140 

Environment, Climate Change and Forest (FR 2 (i)) Department 26.09.2023



சீருடைப்பணியாளர்களுக்கு (காவல் துறையினருக்கு) மலிவு விலை அங்காடிகளை திறக்க கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்டமாக சென்னை, திருச்சி மற்றும் மதுரையில் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கும், காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் மலிவு விலை அங்காடிகள் துவங்கப்பட்டது.

அதற்கான அரசாணை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

G.O.(Ms) No 824       HOME (POL.XIII) DEPARTMENT Dated 07.12.2011

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் மூலம் வனத்துறையில் பணிபுரியும் சீருடைப்பணியாளர்களுக்கும் மலிவு விலை அங்காடிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டதைத்தொடர்ந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அரசுக்கு சங்கத்தின் நியாயமான கோரிக்கையினை எடுத்துரைத்து வனச்சீருடைப்பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வனச்சீருடை பணியாளர் குடும்பமும் மலிவு அங்காடியினைப்பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது.

அதற்கான அரசாணை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

G.O.Ms. No 171 Environment and Forests (FR.2) Department Dated: 23.10.2013

சுமார் 2 வருட தொடர்முயற்சியின் பலனாக இந்த சலுகை பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு சீருடைப்பணியாளர்களுக்கான மலிவுவிலை அங்காடிகள் 44 இடங்களில் செயல்பட அரசு ஆணை வழங்கியதைத்தொடர்ந்து தற்போது மாவட்டத்தலை நகரங்கள் மற்றும் பட்டாலியன்களில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அதற்கான அரசாணை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

G.O.Ms. No 532 HOME (POL.XIII) DEPARTMENT   Dated: 04.08.2014

இதன்மூலம் வனச்சீருடைப்பணியாளர்களாகிய நாம் அதன் சலுகையினை பெற்று வருகிறோம். இச்சலுகை கிடைக்க அரும்பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது வனச்சீருடைப்பணியில் புதிதாக சேர்ந்தவர்களில் ஒருசிலர் மலிவு விலை அங்காடியில் பொருட்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யாமல் உள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் கீழ்க்காணும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து அவர்களது மாவட்டத்தில் உள்ள (பொதுவாக ஆயுதப்படை மற்றும் பட்டாலியன்) மலிவு விலை அங்காடியில் விண்ணப்பத்தினை அளித்து உரிய தொகையினை (ரூ.125) செலுத்தி அதற்கான அடையாள அட்டையினை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை கிடைக்க ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகலாம். பணம் செலுத்தியதற்கான இரசீதினை வைத்து அடையாள அட்டை வரும்வரை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 

பணியாளர்களின் நலன் கருதி வெளியிடுவோர்                                                தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம்                                                                   விழுப்புரம்  மாவட்டகிளை                                                                                         (ஒருங்கிணைந்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி)


மலிவு விலை அங்காடி அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் PDF Format காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

1 comment:

  1. This canteen card avail paramilitary forces personnel

    ReplyDelete