பணியேற்பிடைக்காலம் (Joining Time)

தற்போது வனத்துறையில் பல பணியாளர்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும் நிர்வாக காரணத்திற்காகவும் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் ஒரு சில பணியாளர்கள் தொலைதூரங்களுக்கும் ஒரு சில பணியாளர்கள் அருகில் உள்ள மாவட்டத்திற்கும் மாறுதல் பெற்றுள்ளனர். தற்பொழுது பணி புரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பணியிட மாறுதல் பெற்றுள்ள புதிய இடத்திற்கு சென்று பணியில் சேர எவ்வளவு நாட்களை பணியேற்பிடைக்காலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என அரசு விதி உள்ளது. அந்த விதியினை பின்பற்றி பணியில் சேர்ந்து பணிபுரியவும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் அடிப்படை விதிகளின்படி (Fundamental Rules - FR 105 & 106), பணியிட மாறுதலின்போது புதிய பொறுப்பை ஏற்பதற்காக ஒரு அரசு ஊழியருக்கு பயணம் மற்றும் தயாரிப்புக்காக வழங்கப்படும் அவகாசம் பணியேற்பிடைக்காலம் (Joining Time) எனப்படும். இது பொது நலன் கருதி செய்யப்படும் மாறுதல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஊதியம் மற்றும் படிகள் (Pay and Allowances): பணியேற்பிடைக்காலத்தில் உள்ள ஊழியர் பணியில் இருப்பதாகவே கருதப்படுவார். அவர் பழைய பணியிடத்தில் பெற்ற அதே ஊதியம், அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) ஆகியவற்றை முழுமையாகப் பெறத் தகுதியுடையவர்.

விடுமுறைகள்: பணியேற்பிடைக்காலம் தொடங்கும் முன் அல்லது முடியும் பின் வரும் பொது விடுமுறைகள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தப்படாத நாட்கள் (Unavailed Joining Time): பணியேற்பிடைக்காலத்தை முழுமையாகப் பயன்படுத்தாத அரசு ஊழியர்கள், அந்த மீதமுள்ள நாட்களை தங்கள் ஈட்டிய விடுப்புக் கணக்கில் (Earned Leave - EL) வரவு வைத்துக் கொள்ள முடியும்.






No comments:

Post a Comment