பணியிடமாறுதல் - சீருடைப்பணியாளர்களின் மனக்குமுறல்

பணியிடமாறுதல் / சீருடைப்பணியாளர்களின் மனக்குமுறல்

தமிழ்நாடு வனத்துறையில் IFS, TNFS, TNGS, TNFSS, TNMS, TNZSS, TNBS, and Deputation என பல்வேறு பிரிவுகளின் கீழ் 137 வகையான (Category) பணிகள் (Posts) உள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 9722 என தமிழ்நாடு வனத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் TNFSS என்ற தலைப்பில் வனசீருடைப்பணியாளர்கள் உள்ளனர். சீருடைப்பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 6200 ஆகும். இதில் 752 பணியிடங்கள் காலியாக உள்ளது. 5448 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 12 சதவீதம் பணியி்டங்கள் காலியாக உள்ளது. மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு வனத்துறையின் இணையதளத்தில் உள்ளது. 

இந்நிலையில் வனத்துறையில் உள்ள வனசீருடைப்பணியாளர்களுக்கு மட்டும் பணியிட மாறுதலானது ஒரு சில ஆண்டுகளாக இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட்டு அதன்பின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. இந்த இணையவழி பணியிட மாறுதலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சீருடைப்ணியாளர்களும் அதன் தமிழ்நாடு வன அலுலர்கள் சங்கமும் பல்வேறு சமயங்களில் அரசு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது- ஆனால் இதுநாள்வரை அது சரி செய்யப்பட்டதாக தெரியவில்லை.

சீருடை பணியாளர்களும் இணையவழி பணியிட மாறுதலில் ஆர்வம் காட்டாமல் அதில் முறைகேடு நடப்பதாக கருதுகின்றனர் இது தொடர்பாக நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளது மேலும் தற்போது இணைய வழி பணியிட மாறுதலுக்கான தேதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது அவ்வாறு தேதிகள் நிர்ணயம் செய்ததில் மீண்டும் மீண்டும் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு வருவது பலருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது தற்போது சீருடை பணியாளர்களுக்கு மட்டும் ஏன் இணையவழியில் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என்ற கேள்வியும் ஒரு சிலருக்கு உள்ளது வனத்துறையில் உள்ள மொத்த பணியாளர்களுக்கும் பணியிட மாறுதல் இணைய வழியில் வழங்கப்படாமல் இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சீருடை பணியாளர்கள் மூன்றாண்டுகள், ஆறு ஆண்டுகள் என ஒரே இடத்தில் பணியில் இருந்தால் பதவிக்கு தக்கவாறு அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது இது அவர்களுடைய குடும்பத்தையும் குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும் என்றும், வயதான பெற்றோர்களை கவனிக்கமுடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தும் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் பல பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. 

பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சீருடைப்பணியாளர்களே வனத்துறையின் முதுகெலும்பு. வனம் இல்லையேல் வனத்தை பாதுகாக்க சீருடைப்பணியாளர்கள் தேவையில்லை. சீருடைப்பணியாளர்கள் இல்லையெனில் மற்ற பதவிகள் எதுவும் இல்லை. தேவையும் இல்லை.  ஆனால் சீருடைப்பணியாளர்கள் உரிய மரியாதையாக நடத்தப்படுகிறார்களா என்றால் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம். மாவட்ட, கோட்ட, மண்டல அலுவலகங்களுக்கு சென்றால் உட்காருங்கள் என்று சொல்வது கூட இல்லை. இருக்கையும் இருக்காது. தொலைவில் இருந்து வரும் சீருடைப்பணியாளர்கள் சீருடை மாற்றவோ ஓய்வு எடுக்கவோ இடமும் இருக்காது. இவ்வாறு பல்வேறு இன்னல்களை சந்தித்து வேலை பார்ப்பதே அவர்களின் குடும்பத்திற்காகத்தான். பணியிடமாறுதல் என்ற பெயரில் குடும்பத்தையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் பணியினை ஆர்வமுடன் பொறுப்புடன் செய்யமுடியுமா? பணியிடமாறுதலில் எவ்வித குளறுபடியும் இல்லை அது நியாயமாகத்தான் நடைபெறுகிறது என்பதை பணியாளர்களுக்கு உணர்த்தவேண்டியது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமையாகும். சீருடைப்பணியாளர்கள் சிறப்பாக பணிசெய்ய வழிவகை செய்யவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.





Decision and Communication at PCCF Office 06.06.2026 to 09.06.2026

Decision and Communication at PCCF Office 06.06.2026 to 11.06.2026

Decision and Communication at PCCF Office 06.06.2026 to 13.06.2026






No comments:

Post a Comment