வன வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞரை சந்தித்தல்

 வன வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞரை சந்தித்தல்

வனத்துறையில் பணிபுரியும் வனப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது, அதிகாரிகளால் தீர்க்க இயலாதபோது அல்லது தங்களுக்கான நியாயம் மறுக்கப்படும்போதும் வனத்துறைக்கு எதிராக நீதிமன்றங்களை நாடுகின்றனர். பொதுவாக ஓய்வூதியம், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் பணிவேண்டுதல், பணியிடமாறுதல் அல்லது குற்றத்தாள் தொடர்பானதாகவே இருக்கும். இது தவிர பொதுப்பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வழக்குகளுக்காகவும் நீதிமன்றத்தை அணுகுகின்றனர.    


பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போது அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சம்மந்தப்பட்ட வனக்கோட்டங்களில் இருந்து அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வழக்கு தொடர்பாக எடுத்துரைக்கப்படவேண்டும். இந்த பணிகளுக்கு சீருடைப்பணியாளர்களையே வனக்கோட்டங்களிலிருந்து அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். களப்பணியாளர்களாகிய சீருடைப்பணியாளர்களுக்கு அந்த வழக்கின் முழு விபரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் சீருடைப்பணியாளர்களே சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அரசு வழக்கறிஞர் அவர்கள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அவர்களுக்கு வழக்கு தொடர்பான விபரங்களோடு சம்மந்தப்பட்ட உதவியாளர் அல்லது கண்காணிப்பாளர்  தங்களை சந்திக்கவேண்டும் என தெரிவித்ததைத்தொடர்ந்து துறைத்தலைவர் அவர்களும் அது தொடர்பாக மாவட்ட மற்றும் மண்டல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

PCCF (HOD) Ref No: L2/7004/2023   Dt : 13.01.2025

மேற்கண்ட இரண்டு கடிதங்களின் நகல்களையும் காண்பதற்கு

இங்கு கிளிக் செய்யவும் 


1 comment: