ராம்சர் அங்கீகாரம் (RAMSAR CONVENTION)

ராம்சார் பிரகடனம்

ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 02.02.1971 அன்று புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப்பேரிடர்களிலிருந்து நிலப்பகுதியை காப்பதில் முக்கியப்பங்காற்றும் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட ஈர நிலங்களின் அழிவைத்தடுப்பதற்காக முதல் சர்வதேச மாநாடு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. 1982 இல் இந்தியா கையொப்பமிட்டது. இதுவரை 172 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சதுப்பு நிலங்களை (ஈரநிலங்கள் உள்ளிட்ட) பாதுகாக்க வேண்டும் எனவும், பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லவேண்டும் எனவும், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகடனம் என்று பெயர். இம்மாநாட்டில் ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன. அவ்வாறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட பிப்ரவரி 2 ஆம் தேதி உலக ஈரநாள் என்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ராம்சார் நகரில் கூடியதால் இந்த அமைப்புக்கு ராம்சார் அமைப்பு என பெயரி்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஈரநிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு 2450 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய அளவில் 75 இடங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 14 இடங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 14 இடங்கள்

1. Chitrangudi Bird Sanctuary, 

2. Gulf of Mannar Marine Biosphere Reserve, 

3. Kanjirankulam Bird Sanctuary, 

4. Karikili Bird Sanctuary, 

5. Koonthankulam Bird Sanctuary, 

6. Pallikarnai Marsh Reserve Forest, 

7. Pichavaram Mangrove, 

8. Point Calimere Wildlife and Bird Sanctuary, 

9. Suchindram Theroor Wetland Complex, 

10. Udhayamarthandapuram Bird Sanctuary, 

11. Vadavur Bird Sanctuary, 

12. Vedanthangal Bird Sanctuary, 

13. Vellode Bird Sanctuary, 

14. Vembannur Wetland Complex

ஈரநிலம் 

ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கடலோர குடியிருப்பு திட்டுகள், பவளத்திட்டுகள், தாழ்வான நிலங்கள்,குளம், குட்டைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல்வயல்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவை ஈரநிலங்கள் ஆகும்.

சதுப்பு நிலம்

கடலுக்கும் நிலப்பகுதிக்கும் இடையே ஆழம் குறைந்த ஆண்டு முழுவதும் நீர்த்தேங்கியிருக்கும் நிலப்பரப்பு சதுப்பு நிலம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் ஆழம் கொண்டவை. இதில் உப்புத்தன்மை உடைய நீர் காணப்படும், (Brackish Water) கடல் நீரை விட குறைவான உப்புத்தன்மையும் நன்னீரைவிட அதிகப்படியான உப்புத்தன்மையும் இந்நீரில் காணப்படும்.

பூமியின் நுரையீரல் காடுகள் என்பர், அதேபோல் பூமியின் சிறுநீரகம் சதுப்பு நிலங்கள் ஆகும்.

சதுப்பு நிலத்தின் பயன்கள்

1. நன்னீரின் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது
2. வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்கிறது
3. காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சுகிறது. இதனால் காற்று மாசு             
    கட்டுப்படுத்தப்படுகிறது.
4. ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரசாயனங்களின் மறுசுழற்சிக்கு உதவுகின்றன. 
    அதாவது மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்துகிறது.  
5. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க உதவுகிறது.
6. நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க உதவுகிறது.
7. கடல்நீர் உயரும்போது அதனை உள்வாங்க உதவுகிறது.
8. மாசு மற்றும் திடக்கழிவுகளை கட்டுப்படுத்தவும், கரியமில வாயு மற்றும்              மீத்தேனை உறிஞ்வும் உதவுகிறது.
9. நீர் மகரந்தச்சேர்க்கை நடைபெறவும் மீன் இனப்பெருக்கத்தை 
   அதிகரிக்கவும் உதவுகிறது.
10. மண் அரிப்பை தடுக்கவும் புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும் 
    உதவுகிறது.
11. வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
12. அரிய பல்லுயிர்ப்பெருக்கத்தை திடப்படுத்தி வளப்படுத்த சதுப்பு நிலங்கள் 
   பயன்படுகிறது.

சதுப்பு நிலங்களுக்குள்ள அச்சுறுத்தல்கள்
1. நில ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு.
2. நீர்பிடிப்புப்பகுதிகளில் ஏற்படும் விரும்பத்தாக மாற்றங்கள்.
3. தொழிற்சா்லை மற்றும் மருத்துவக்கழிவுகள் கலக்கப்படுதல்.
4. நகரத்தில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் திட மற்றும் திரவக்ழிவுகள் 
    கலக்கப்படுதல்.
5. அருகில் உள்ள விளைநிலங்களில் இருந்து உரம் மற்றும் பூச்சிமருந்துகள் 
   மழை மற்றும் கழிவு நீருடன் கலந்து சதுப்பு நிலங்களை அடைதல்.
6. வேலிக்கருவை மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்டவை படர்ந்து 
    காணப்படுவது போன்ற அச்சுறுத்தல்கள் உள்ளன.

1970 - 2015 காலகட்டத்தில் உலக அளவில் சுமார் 35% சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெருநகரத்தில் உள்ள ஒரே சதுப்புநிலம் என்ற பெருமையைக் கொண்ட சென்னையின் பள்ளிக்கரணை 1960 இல் சுமார் 6000 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது. தற்போது 700 ஹெக்டருக்கும் குறைவாகவே உள்ளது.







No comments:

Post a Comment