வன உயிரின மீட்புப்பணியில் வனத்துறையினர்

வன உயிரின மீட்புப்பணியில் வனத்துறையினர்

தமிழ்நாடு வனத்துறையின் முதன்மையான பணி என்பது வனத்தை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது ஆகும். வனத்தை பாதுகாப்பது என்பது அரசுக்கு சொந்தமான வனப்பகுதியை பாதுகாப்பது என்பது மட்டுமல்ல. வன உயிரினங்களையும் பாதுகாப்பது ஆகும். ஒரு காலத்தில் வன உயிரினங்கள் வனப்பகுதியிலேயே பெரும்பாலும் காணப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் வனத்தை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தன. தற்போது வன உயிரினங்களில் பாம்பு மான் மயில் முயல் காட்டுப்பன்றி குரங்கு போன்ற உயிரினங்கள் வனப்பகுதியில் மட்டுமின்றி கிராமப்பகுதியில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைப்பகுதிகள் விவசாய நிலங்கள் குன்று மற்றும் மலைப்பகுதிகள் இன்னும் பிற இடங்களில் காணப்படுகிறது. யானை சிறுத்தை போன்ற உயிரினங்கள் ஒருசில சமயங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை நோக்கி வருகின்றன. இவற்றால் மனித வன உயிரின மோதல் ஏற்படுகிறது. 


வன உயிரினங்களை பாதுகாப்பது மட்டுமின்றி வன உயிரினங்களை மீட்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். வன உயிரினங்களில் புலி சிறுத்தை யானை போன்ற உயிரினங்கள் காவல்துறை தீயணைப்புத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரின் ஒத்துழைப்புடன் போதுமான பணியாளர்களின் உதவியுடன் தொழில்நுட்ப ரீதியாக மீட்புப்பணி நடைபெறுகிறது.  
No comments:

Post a Comment