மனித வனஉயிரின மோதல் நிவாரணத்தொகை G.O 141 dt 25.11.16

மனித வன உயிரின மோதல் என்பது சமீப காலங்களில் தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது. இதற்கு காரணம் பல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது வன உயிரினங்களின் வாழ்விடம் அழிக்கப்படுவது, வன உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, உணவுச்சங்கிலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட உயிரினம் அழிவது என பட்டியல்கள் நீள்கின்றன. தற்போது பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு வேட்டையாடுதல் குறைந்துவிட்டது. வனச்சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
மனித வன உயிரின மோதல்களில் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகும். இவ்வாறு மனித வன உயிரின மோதல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு இழப்பீட்டுத்தொகை வழங்கி வருகிறது.

வனச்சரக அலுவலர் அவர்களால் பரிந்துரை செய்து அனுப்பவேண்டிய படிவத்தினை காண்பதற்கு அல்லது பதிவிறக்கம் செய்வதற்கு
இங்கு கிளிக் செய்யவும்.

வனச்சரக அலுவலர் அவர்கள் பயிர்சேதம் தொடர்பாக பரிந்துரை அனுப்பும்போது விவசாயி பயிர் செய்துள்ள பரப்பளவு அதில் எவ்வளவு பரப்பளவு சேதம் ஏற்பட்டுள்ளது போன்ற விபரங்களை தெரியபடுத்தவேண்டும். அரசு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.25000 வழங்குகிறது.

Government Order

Enhancement of Relief of Compensation for different items of damage / loss caused by wild animals for payment of compensation  

G.O.Ms.No  141 Environment and Forests (FR 5) Department Dated 25.11.2016

Government Order

Enhancement of Relief of Compensation for different items of damage / loss caused by wild animals for payment of compensation  

G.O.Ms.No  98 Environment and Forests (FR 5) Department Dated 17.08.2011
Click here to download 


மனிதர்களுக்கும் வன உயிரினங்களுக்குமான மோதல் அதாவது முரண்பாடான நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் காணப்படுகிறது. ஆனால் பொதுவாக மனிதர்களுக்கும் அவர்களுடைய உடைமைகளான விளைபயிர்கள், கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் என பலதரப்பட்டவற்றிற்கு வன உயிரினங்களான யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், மயி்ல் இப்படி பல வன உயிரினங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு அவ்விலங்குகளின் மீது எதிர்மறையான எண்ணம் உருவாகின்றது. அதன் காரணமாக மனிதன் வனஉயிரினத்தை கொன்றுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது. ஒருசில வன உயிரினங்கள் எண்ணிக்கையில் தற்போது குறைந்து வருகிறது. காரணம் என்னவென்றால் வன உயிரினங்கள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுவது, இரயில் மற்றும் பிற வாகனங்கள் மோதி இறப்பது, நோய் வாய்ப்பட்டு இறப்பது என பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழக அரசு வனஉயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணத்தொகை வழங்குகிறது. அதாவது மனித உயிரிழப்பு, உடைமைகள் இழப்பு என ஒவ்வொன்றிற்கும் நிவாரணத்தொகையை அறிவித்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாணைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களை தொடர்புகொண்டு அதற்கான ஆவணங்களை தாக்கல்செய்து  உரிய நிவாரணம் பெறமுடியும்
(Please refer with the concern officers)No comments:

Post a Comment