ஆடாதொடை (Justicia adhatoda)

ஆடாதொடை (Justicia adhatoda)

ஆடாதோடை, (Justicia adhatoda) ஆடாதொடை, வாசைஅல்லது ஆடாதோடா, என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.
ஆடாதோடை புதர் செடி வகையைச் சார்ந்தது. உயரமான, அதிகக் கிளைகளைக் கொண்ட, அடர்த்தியான தாவரம். வெயிலிலும் பசுமை மாறாத கரும்பச்சை நிறமான ஈட்டி போன்ற இலைகள், புதர் போன்ற செடி அமைப்பு, நுனியில் வெள்ளையாக உள்ள கொத்தான பூக்களைக் கொண்டு ஆடாதோடை தாவரத்தை எளிதில் இனம் காணலாம்.

ஆடாதோடை தாவரத்தில் நுனியில் கொத்தான இலைகளைப் போன்ற அமைப்புடைய பூவடிச் செதில்களில் பூக்கள் பூக்கும். ஆடாதோடை பழங்கள், 4 விதைகளுடன் காணப்படும், விதைகள் உலர்ந்து வெடிக்கும் வகையைச் சார்ந்தவை.

தமிழகமெங்கும் ஆடாதோடை விளைகின்றது. கிளைகளை வெட்டி நட்டாலே முளைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளது. கிராமங்களில், வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் ஏராளமாகக் காணப்படுகின்றது.


 ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை.
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.ஆடாதோடையானது முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.

( பொருள் - கைப்பு

            அறுசுவைகளில் ஒன்று
            பாகற்காய் போன்ற சுவை
            கசப்பு
            பிடிக்காத ஒன்று
            வெறுப்பு

கசப்புச் சுவை (Bitter)

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.)


மருத்துவப்பயன்கள்    ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும் என்கிற பழமொழி உண்டு.

இலையின் ரசத்தை பத்து முதல் இருபது துளிவரை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட வாயு, பற்பலசுரங்கள், வயிற்று நோய், ரத்தக்கொதிப்பு, வாந்தி, விக்கல் ஆகிய நோய்களைப்போக்கும். நல்ல குரல் வளத்தை தரும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை மாலை கொடுத்துவர சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதொடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக்கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடை பட்டையை நன்றாக இடித்து சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும் பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமஅளவு சேர்த்து இடித்து சலித்து அரை முதல் ஒருகிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, ஈளை, இருமல், என்புருக்கி ஆகியவை குணமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி மாதத்தில் வேர் கசாயத்தை காலை மாலை கொடுத்துவர சுகப்பிரசவம் ஆகும்.

சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.


இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய்கள் தீரும்.

 இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்கொடுக்க இருமல் தீரும்.


ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.


இருமல், சளி, தொண்டைக்கட்டு தீர பசுமையான ஆடாதோடை இலைகளைச் சேகரித்துக்கொண்டு, நடுநரம்பை நீக்கி, ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

சளி இல்லாமல் புகைச்சலாக ஏற்படும் வறட்டு இருமல் குணமாக 3 கொழுந்து ஆடாதோடை இலைகளைப் பறித்து, மைய நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ½ டம்ளர் அளவாகக் காய்ச்சி காலையில் குடிக்க வேண்டும். இதுபோல 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். காய்ச்சல் குணமாக ஒரு டம்ளர் தண்ணீருக்கு 4 ஆடாதோடை இலைகள் வீதம் எடுத்து நசுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைத் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த ஆடாதோடை இரசத்தை, காலை, மாலை ½ டம்ளர் வீதம் சரியாகும்வரை சாப்பிட வேண்டும்.

இந்த இரசம் சாப்பிடும் காலத்தில் பத்தியம் கடைபிடிக்க வேண்டும். செரிக்க கடினமான உணவு, குளிர்ந்த உணவு, புளிப்பான உணவு சாப்பிடுதல் கூடாது. பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

காச நோயை குணப்படுத்தவும் மற்றும் அதனால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளையும் தடுக்கவும் ஆடாதோடா இலைகளை பயன்படுகிறது. நுரையீரல்களில் ஏற்படும் கோளாறுகளை போக்க, நன்கு காய்ந்த ஆடாதோடா இலைகளை எடுத்து இடித்து பொடியாக்கி அப்பொடியை உணவுடன் அல்லது நீருடன் அல்லது பாலுடன் கலந்து குடிக்கலாம், இனிப்பு சுவைக்கு தேனை கலந்து கொள்ளலாம், அடிக்கடி ஏற்படும் சளியை போக்கவும் வீட்டில் தயாரித்து வைத்து கொண்ட பொடியை பாலில் தேனுடன் கலந்து அருந்த நல்ல பலனை தரும். அதிக மூலிகை மருத்துவத்தை கொண்டது.
(refer with experts)
Justicia adhatoda

Justicia adhatoda, commonly known in English as Malabar nut, adulsa, adhatoda, vasa, or vasaka,is a medicinal plant native to Asia, widely used in Siddha Medicine, Ayurvedic, homeopathy and Unani systems of medicine.

Justicia adhatoda is a shrub with lance-shaped leaves 10 to 15 centimeters in length by four wide. They are oppositely arranged, smooth-edged, and borne on short petioles. When dry they are of a dull brownish-green colour. They are bitter-tasting. When a leaf is cleared with chloral hydrate and examined microscopically the oval stomata can be seen. They are surrounded by two crescent-shaped cells at right angles to the ostiole. The epidermis bears simple one- to three-celled warty hairs, and small glandular hairs. Cystoliths occur beneath the epidermis of the underside of the blade.