Viluppuram circle

பணிநிறைவு பாராட்டு விழா

திரு.N.சின்னதம்பி
மிகைப்பணியிட வனக்காவலர்
திண்டிவனம் வனச்சரகம்
விழுப்புரம் வனக்கோட்டம்
நாள் 30.04.2020


 இன்று 30.04.2020 விழுப்புரம் வனக்கோட்டம், திண்டிவனம் வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு.N.சின்னதம்பி மிகைப்பணியிட வனக்காவலர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த 37 ஆண்டுகளாக வனத்துறையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். தோட்டக்காவலராக பணியில் சேர்ந்து மிகைப்பணியிட தோட்டக்காவலராக பல ஆண்டுகள் விழுப்புரம் வனக்கோட்டத்தில் பணிபுரிந்து பின்னர் மிகைப்பணியிட வனக்காவலராக பதவி உயர்வு பெற்று திண்டிவனம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்து இன்று 30.04.2020 இல் பணி ஓய்வு பெற்றுள்ளார்.



தோட்டக்காவலர்கள் பெரும்பாலும் சமுக வனச்சரகங்களில் பணிபுரிந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து அவற்றை நன்றாக பராமரித்து வந்துள்ளனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்க போதிய பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அரசு இவ்வாறான பகுதிகளை பாதுகாக்க போதுமான பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் என இவரைப்போன்ற பலரும் கருதுகின்றனர்.


இவர்களின் முக்கியமான பணி யாதெனில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது அவற்றை மழை வெயில் இரவு பகல் என பாராமல் பராமரித்து ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நடவு செய்து பாதுகாத்து பராமரிப்பது ஆகும்.

                                                    ****************

திரு.ஏழுமலை
வனக்காப்பாளர்
விழுப்புரம் வனச்சரகம்
விழுப்புரம் வனக்கோட்டம்

நாள் 30.04.2020


இன்று 30.04.2020 விழுப்புரம் வனக்கோட்டம், விழுப்புரம் வனச்சரகத்தில் பணிபுரிந்த திரு.ஏழுமலை வனக்காப்பாளர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

அவர் கடந்த 34 ஆண்டுகளாக வனத்துறையில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். தோட்டக்காவலராக பணியில் சேர்ந்து மிகைப்பணியிட தோட்டக்காவலராக பல ஆண்டுகள் விழுப்புரம் வனக்கோட்டத்தில் பணிபுரிந்து  பின்னர் வனக்காவலராக பதவி உயர்வு பெற்று முதுமலை, ஊட்டி போன்ற இடங்களில் பணியாற்றி பின்னர் வனக்காப்பாளராக பதவி உயர்வில் விழுப்புரம் வனச்சரகத்தில் பணியில் சேர்ந்து இன்று 30.04.2020 இல் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக அவருடைய பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடத்தமுடியவில்லை என தெரிகிறது. முறையாக நடத்தமுடியாத வருத்தம் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் அவருடைய வனச்சரகத்தை சேர்ந்தவர்களுக்கும் இருந்தது.

பொதுவாக வனத்துறையை பொறுத்தவரை வனச்சீருடை பணியாளர்கள் பணியின்போது தங்களுடைய குடும்பம் மற்றும் உறவுகளைப்பிரிந்து தான் பணிசெய்யவேண்டிய சூழல் உள்ளது. ஏனெனில் இவர்களின் பணியிடம் என்பது வனம் மற்றும் வனத்தை சார்ந்த பகுதியாகும். குடும்ப உறுப்பினர்களை தங்களுடனேயே தங்க வைப்பது என்பது சற்று கடினமான ஒன்றாகும். பணி ஓய்வுக்குப்பின்னர் இவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளுடன் நன்றாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.

***************
  

திரு.A.நாராயணன்
மிகைப்பணி தோட்டக்காவலர்
சமூக வனச்சரகம்
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் வனக்கோட்டம்
நாள் 28.02.2018

விழுப்புரம் வனக்கோட்டம், கள்ளக்குறிச்சி சமூக வனச்சரகத்தில் மிகைப்பணி தோட்டக்காவலராக பணிபுரிந்து வந்த திரு.A.நாராயணன் அவர்கள் 28.02.2018 அன்று வயது மூப்பின் காரணமாக பணிநிறைவு பெற்றார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


இவர் கடந்த 36 ஆண்டுகளாக வனத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இவரைப்போன்று தோட்டக்காவலராக பணியில் சேர்ந்து மிகைப்பணி தோட்டக்காவலராக உயர்ந்து பெரும்பாலானோர் பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு அரசு எந்தவித பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதிய பலன்களும் கொடுக்காமலேயே அனுப்பிவைக்கிறது என்பது சற்று வேதனையான ஒன்றாகும். இவர்கள் ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை குறைந்த அளவு ஊதியத்தில்தான் வேலை செய்துவந்துள்ளனர்.


இவர்களுடைய பாராட்டு விழாக்களில் பேசும் பலரும் இவர்கள் கிராமங்களில் உள்ள ஏரி மற்றும் மலைகளில் மரக்கன்றுகளை நட்டது அவற்றை பராமரித்து இன்றுவரை பாதுகாத்ததின் விளைவாக அரசும் அந்த கிராம பஞ்சாயத்தும் வருமானத்தை ஈட்டியுள்ளன என்றும் இதனால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது என்றும் இவர்கள் செய்த பணிகளை பாராட்டுகின்றனர்.

ஆனால் இவர்கள் ஈட்டியது என்று பார்த்தால் தற்போதுவரை ஒன்றுமில்லை. ஆனால் தற்போது இவரைப்போன்று உள்ள ஒரு சிலருக்கு மாலி மற்றும் இரவுக்காவலர் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டு ஓரளவு உயர்ந்த ஊதியம் கிடைக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் ஆற்றிய பணிக்கு ஏதுமில்லை என்கிறபோதுதான் வருத்தமாக உள்ளது. மொத்தத்தில் இவர்கள் பணி வனத்துறைக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் வருவாயை ஈட்டித்தந்தது மட்டும் இல்லாமல் மரங்களையும் அதன்மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து தந்துள்ளது. இவர்கள் ஆற்றிய பணி மகத்தானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.

என்னும் குறளுக்கேற்ப இவர்கள் நல்ல அரணை அரசுக்கும் அடுத்த சந்ததியினருக்கும் அமைத்துள்ளனர். அவர்களை வாழ்த்துவோம். அவர்கள் பணியை போற்றுவோம். வனத்துறையிலேயே பொழுதைக்கழித்த இவர்கள் இனி தங்களுடைய உற்றார் உறவினர்களுடன் இன்புற்று வாழ இறைவனை வணங்குவோம். இவர்கள் நட்ட மரங்களின் பலன்களை நாம் அனுபவிக்கிறோம்.

நாம் இவர்களைப்போன்று தற்போது மரங்களை நட்டால் நமது அடுத்த தலைமுறை அதன் பலன்களை அனுபவிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
                                                        நன்றி



No comments:

Post a Comment