விழுப்புரம் வனக்கோட்டம் - Meetings

                              மாவட்ட செயற்குழு கூட்டம் 

நாள்: 20.03.2022                                                                         இடம்: பிச்சாவரம் 

ஒருங்கிணைந்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் 20.03.2022 ஆம் தேதி பிச்சாவரத்தில் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு இனிதே தொடங்கியது. 
வரவேற்புரை  : திரு.S.பாலகிருஷ்ணன் மாவட்ட துணைத்தலைவர்
தலைமை         : திரு.M.பாபு மாவட்டத்தலைவர் / மாநில அமைப்பு செயலாளர்
முன்னிலை     : திரு.K.முருகானந்தன், மண்டல செயலாளர், வடக்கு மண்டலம் 
சிறப்புரை          :
                திரு.K.S.இரவிக்குமார் மாவட்ட செயலாளர்
                திரு.R.ஆனந்தசெல்வகுமார், மாவட்ட பொருளாளர்
               திரு.திரு.G.அருண்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்
               திரு.A.முரளிகிருஷ்ணன், சரகப்பிரதிநிதி
               திரு.M.இராஜேஷ்குமார், சரகப்பிரதிநிதி
மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்கள்
தற்போதைய மாவட்ட வன அலுவலர் விழுப்புரம் அவர்கள் பணியாளர்களின் நலனில் அக்கரையுடன் செயல்படுவதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர்களின் ஊதிய உயர்வு அதாவது கல்வித்தகுதி மற்றும் பணிக்கேற்ற ஊதியம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேணடும் எனவும் தற்போது பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களின் பெயர்களை மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியலில் இணைத்து அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவவேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. 

தற்போதைய சூழலில் சீருடைப்பணியாளர்களின் குறிப்பாக வனக்காப்பாளர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக எடுத்துரைக்கப்பட்டது. அதாவது பாதுகாப்பு பணியைத்தவிர பிற பணிகளான வனவிலங்கு மீட்புப்பணி, திட்டப்பணிகளுக்கு உதவுதல், நீதிமன்ற வழக்குகளை கையாளுதல் மற்றும் அலுவலகப்பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளையும் கூடுதலாக பார்க்கவேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது.  எனவே மேற்காணும் கூடுதல் பணிகளை மேற்காெள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
               

                                                    

                                                             *******
                                 மாவட்ட பொதுக்குழு கூட்டம் 

நாள்: 30.12.2017                                                 இடம்: A.S.G மகால், விழுப்புரம்


 தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டக்கிளையின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30.12.2017 ம் தேதி பிற்பகல் 4.00 மணியளவில் A.S.G மகால், விழுப்புரத்தில் நடைபெற்றது. அதில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


தீர்மானங்கள்
1. நேரடி பணிநியமனம் பெறப்பட்ட வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனவர்களை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. நீண்ட காலமாக தோட்டக்காவலராக இருந்து மிகைப்பணி தோட்டக்காவலராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து தற்போது மாலி, ஓய்வு விடுதி காவலர் மற்றும் இரவுக்காவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை வாழ்த்தி வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. நீண்ட காலமாக வெளியிடப்படாமலிருந்த வனக்காப்பாளர்களின் முதுநிலைப்பட்டியல் வெளியிட்டதில் உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. விழுப்புரம் வன மண்டலத்தில் இதுவரை நடத்தப்படாமல் இருந்த மண்டல, மாவட்ட அளவிலான காலமுறை கூட்டத்தினை சங்க நிர்வாகிகளை அழைத்து அவசியம் நடத்தப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. அனைத்து வனக்கோட்டங்களிலும் மாதஊதியத்தினை காலதாமதமின்றி வழங்கவேண்டும் எனவும், பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு, பயணப்பட்டியல், LTC, மருத்துவ விடுப்பு போன்றவை உரிய காலத்தில் தாமதமின்றி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


6. ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி, காலணி, மழைஅங்கி, டார்ச்லைட் போன்றவை நிதியாண்டு முடிந்தபின் வழங்குவதை தவிர்த்து உரிய காலத்தில் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7. பணியாளர்களின் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாமல் அவ்வப்போது நினைத்த நேரத்தில் உயர் அலுவலர்களால், அடிக்கடி பணியாளர்களை பணியிடமாற்றம் செய்து ஆணை பிறப்பிப்பதை முழுமையாக தவிர்த்து மூன்றாண்டுக்கு ஒருமுறை கலந்தாய்வின் மூலம் மட்டுமே முறையாக பணியாளர்களின் வேண்டுகோளின்படி பணியிடமாற்றம் வழங்கிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8. வனங்களுக்கு வெளியே நீண்டதூரம் சென்று TBGP, TNRSP போன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு பயணப்படி வழங்கிடவேண்டும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9. வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் நிலையில் பதவி உயர்வு வழங்குவதில் விதிகளை தளர்த்தி, காலிப்பணியிடங்களை கருத்தில் கொண்டு முதுநிலை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


10. ஒவ்வொரு வனச்சரகத்திலும் நீதிமன்ற வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் அதற்கென தனி வனக்காப்பாளர்களை நியமிக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11. கல்வராயன் மலைப்பகுதியினை காப்புக்காடாக மாற்ற, அறிவிக்கையினை விரைந்து முடிக்கவேண்டும் எனவும், கல்வராயன் மலைப்பகுதிக்கு அவ்வப்போது மாற்றப்படாமல் நிரந்தரமான வன உரிமை தீர்ப்பு அலுவலரை (Forest Settlement Officer) நியமிக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12. உளுந்தூர்பேட்டை வனச்சரகத்தில் உள்ள மலட்டாறு பகுதியில் மணல் பாதுகாப்பிற்கும், செஞ்சந்தன தோட்டப்பாதுகாப்பிற்கு சிறப்புப்படையும், சுழற்சி முறையில் தற்காலிக பணியாளர்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13. கல்வராயன் மலைப்பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முந்தைய மாவட்ட வனஅலுவலரால் வழங்கப்பட்ட குற்றத்தாள்களை அப்போதைய தலைமை வனப்பாதுகாவலர் தள்ளுபடி செய்ய  வேண்டும் என மாவட்ட வன அலுவலருக்கு அறிவுறுத்திய பின்பும் நிலுவையில் உள்ளது. எனவே தற்போது உள்ள மாவட்ட வன அலுவலர் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


14. பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை முழுமையாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அனைவருக்கும் வழங்கிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15. ஒவ்வொரு நிலையிலும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் திட்ட இலக்குகள் முடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறையில் சீருடைப்பணியாளர்களின் பணியிடங்களை அரசுக்கு சரண் செய்து குறைக்கும் நடவடிக்கையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள் ஈடுபட்டு குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டால் ஒரு காலகட்டத்தில் கீழ்நிலைப்பணியாளர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


16. பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக மனித வன உயிரின மோதல்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் மனித வன உயிரின மோதல் தடுப்பு பிரிவு (படை) உருவாக்கிடவேண்டும்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

17. திட்ட இலக்குகளை எட்டுதல், உயர்அலுவலர்களின் அதிகப்படியான களத்தணிக்கைகள், மனித வன உயிரின மோதல்களை தடுத்து வன உயிரினங்களை மீட்டு வனப்பகுதிக்குள் விடுதல், திட்டங்களுக்கான முன்னோடிப்பணிகள் மற்றும் குறிப்பிட்டு கூற முடியாத எதிர்பாராத வாகன பயன்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு வனச்சரக அலுவலர்களின் ஈப்பு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவினை 70 லிட்டரிலிருந்து உயர்த்தி 150 லிட்டர் அல்லது மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பயணங்களின் அடிப்படையில் செலவினங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


18. காவல் சுற்றுப்பகுதிகளான பீட்களை 500 எக்டர் பரப்பளவிற்கு மிகாமல் மாற்றியமைக்க வேண்டும் (500 எக்டருக்கு ஒரு பீட் என மாற்றியமைத்தல்) என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

19. வனச்சரக அலுவலர் நிலையிலிருந்து உதவி வனப்பாதுகாவலர் பதவி உயர்விற்கு ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20. 2018 -ம் ஆண்டிற்கு வனவர் பயிற்சியில் கலந்துகொள்ள வெளியிடப்பட்ட தேர்வுப்பட்டியலில் முதுநிலைப்பட்டியல்படி தேர்வு செய்யப்படாமல் 2017 -ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களை இடைச்செருகல் செய்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்து பயிற்சிக்கு அனுப்பப்பட்ட வனவர்களை திரும்பப்பெற்று முறையான வனவர்களை பயிற்சிக்கு அனுப்பவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


21. வனச்சீருடைப்பணியாளர்களுக்கு எரிபொருள் அலவன்ஸ் உடன் இருசக்கர வாகனம் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

22. காவல்துறைக்கு வழங்குவது போன்று வனச்சீருடைப்பணியாளர்களுக்கும் கூடுதல் பணிநேர ஊதியம், குழு காப்பீடு, கருணைக்கொடை உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


23. மண்டல வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரை அலுவலகபணி தொடர்பாக சந்திக்க வரும் வனப்பணியாளர்களுக்கு ஓய்வு அறை கட்டித்தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

24. சுற்றுலாப்பகுதிகளில் கீழ்நிலைப்பணியாளர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வு அறைகள் வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







                                  ************END****************
                              ** ***********END********************
                        ***** **********END**************************

No comments:

Post a Comment