வனம் (காடு) பற்றி வள்ளுவர்

வனம் (காடு) பற்றி வள்ளுவர்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.


(அதிகாரம்: அரண்.   குறள் 742)
பொருட்பாலில் காடு என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும் என திருவள்ளுவர் அன்றே குறிப்பிட்டுள்ளார்.அதாவது
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும்,
அழகிய நிழல் உடைய காடும் (குளிர்ந்த நிழலையுடைய காடு, செறிந்த காடு, அணி நிழற் காடு') ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

எனவே காடு என்பது குளிர்ந்த நிழலையுடையதாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். குளிர்ந்த நிழல் எப்போது கிடைக்கும் என்று பார்த்தால் அக்காட்டில் பலவகையான மரங்கள் பல நிலைகளில் அதாவது சிறு புல், பூண்டு, செடி, கொடிகள் முதல் ஓங்கி உயர்ந்த மரங்கள் இருந்தால் மட்டுமே வள்ளுவர் குறிப்பிட்ட குளிர்ந்த நிழலையுடைய காடு அதாவது அணிநிழற்காடு இருக்கும். அப்போதுதான் அது ஒரு அரணாக விளங்கும். இவ்வாறு திருக்குறளில் காடு எவ்வாறு இருக்கவேண்டும் என கூறியுள்ளார்,

No comments:

Post a Comment