ஈட்டிய விடுப்பு
(அரசாணை எண். 157 P&AR Dt. 24.06.94
அ) 1.7.94 முதல் விடுப்பு முற்றிலுமாக மத்திய அரசு ஊழியருக்கு வழங்கப்படுவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆ) இதன்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு ஊழியருக்கு முறையே 15 நாட்கள் ஈட்டிய விடுப்புக்கணக்கில் சேர்க்கப்படும்.
இ) மொத்தம் 240 நாட்களுக்கு அதிகமாகக்கூடாது
ஈ) ஒரு அரை ஆண்டின் இடையில் புதியதாக பணி ஏற்கின்ற முறையான ஊழியருக்கு ஒரு மாதத்திற்கு இரண்டரை நாட்கள் என்ற அளவில் அவரின் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
உ) அரை ஆண்டின் இடையில் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற அல்லது விலகும் ஒருவருக்கும் ஒரு மாதத்திற்கு இரண்டரை நாட்கள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும். இதேபோன்று பணிக்காலத்தில் இறப்பவர்களுக்கும் பணியிலிருந்து நீக்கப்படுபவர்களுக்கும் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படும்.
ஊ) ஒரு அரையாண்டில் ஈட்டிய விடுப்பு இருப்பில் சேர்த்த பின்னர் ஒருவர் ஊதியமில்லா விடுப்பு அனுபவிக்க நேருமாயின் (LLP with or without M.C) 10 நாள் LLP க்கு ஒரு நாள் என்ற அளவில் இவ்விடுப்பு குறைக்கப்படும். அதிக அளவாக 15 நாட்கள். தற்காலிக பணியாளர் (அ) தகுதிகள் பருவகாலத்தினரைப் பொருத்தவரை அசாதாரண விடுப்பு காலத்தில் 1/20 பங்குக்கு சமமான நாட்கள் (அதிக அளவாக எட்டு நாட்கள்) வழங்கப்படும் விடுப்பில் கழித்துக்கொள்ளப்படவேண்டும். (அரசு க.எண் 60094/அ.வி III 94-14 ப & நி.சீ.துறை நாள் 21.06.96)
எ) பின்னமாக வரும் ஈட்டிய விடுப்பு முழு நாளாகக் கணக்கிடப்படும்.
ஏ) தற்காலிகப் பணியாளர்கள் / தகுதிகாண் பருவத்தினர் விஷயத்தில் ஒரு அரையாண்டில் அவர்கள் பணிபுரியக்கூடிய ஒவ்வொரு இரண்டு முழு மாதத்திற்கும் இரண்டரை நாட்கள் வீதம் வழங்கலாம். மொத்த இருப்பு 30 நாட்களுக்கு அதிகமாகக்கூடாது.
ஐ) கடைநிலை ஊழியருக்கு மேலே (ஏ) ல் குறிப்பிட்டபடி ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படும். பணிவரன்முறை செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் அரை ஆண்டின் துவக்கத்திலேயே 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு இவர்கள் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
ஒ) ஒரு அரையாண்டின் முதலில் ஒருவர் விடுப்பில் இருக்க நேரிட்டால் அவர் மீண்டும் பணி ஏற்பார் என்று திட்டவட்டமாக தெரிந்தால்தான் அவருக்கு 15 நாட்கள் இருப்பு வைக்கப்படும்.
ஓ) ஒரு ஆண்டு துவக்கத்தில் 226 முதல் 240 நாட்கள் ஈட்டிய விடுப்பு இருப்பு இருக்கும்பட்சத்தில் அவருக்கு அரை ஆண்டு துவக்கத்தில் இருப்பு வைக்கப்படும் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு தனியாக இருப்பு வைக்கப்படும். அந்த அரையாண்டில் அனுபவிக்கும் ஈட்டிய விடுப்பு மற்றும் சரண் விடுப்பு போக மீதம் உள்ள விடுப்பு அரையாண்டின் இறுதியில் பழைய இருப்பில் சேர்க்கப்படும். இது மொத்தம் 240 நாட்களுக்கு அதிகமாகக்கூடாது.
No comments:
Post a Comment