வனத்துறையில் பாதுகாப்பு பணிக்கென வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் மற்றும் வனச்சரக அலுவலர் என நான்கு பதவிகளில் சீருடைப்பணியாளர்கள் உள்ளனர். இது தவிர ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் தோட்டக்காவலர்களும் உள்ளனர்.
சீருடைப்பணியாளர்களின் முதன்மையான பணி வனத்தையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகும். இந்நிலையில் ஒருசில இடங்களில் சீருடைப்பணியாளர்களை (குறிப்பாக வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர்) பகல் நேர அலுவலக காவல்பணி மற்றும் இரவு நேர அலுவலக இரவுக்காவலர் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அவர்களால் அலுவலகப்பணிக்கு சீருடைப்பணியாளர்கள் பயன்படுத்துவது தொடர்பான கடிதம் ஒன்று அனைத்து மண்டல மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. (ந.க.எண் டிசி2 / 2785 / 2022 நாள்: 09.05.2022) அக்கடிதத்தை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
இது தவிர தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2006 இன் கீழ் அலுவலகப்பணி மற்றும் அது தொடர்பான கேள்விக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அலுவலகத்தின் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது. அதனை காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அவர்களது கடிதத்தில் மாவட்ட / கோட்ட மற்றும் மண்டல அலுவலகங்களில் சீருடைப்பணியாளர்களை பகல் மற்றும் இரவு நேர காவல் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) அலுவலகத்தின் மூலம் (ந.க.எண் எல்எல்2 / 033741 / 2022 நாள்: 18.11.2022) அளித்துள்ள தகவலில் வனச்சரக அலுவலகங்களில் பகல் மற்றும் இரவு நேர அலுவலகப்பணிக்கென்று வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை நடைமுறையில் உள்ளதா? நடைமுறையில் இருந்தால் நல்லதே.
No comments:
Post a Comment