மாநில செயற்குழு கூட்டம் 26.02.2022

 மாநில செயற்குழு கூட்டம் 26.02.2022

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 26.02.2022 ஆம் தேதி சனிக்கிழமை ஈரோடு மாநகர் சங்கு நகர் பிரிவில் உள்ள சங்கர் மஹாலில் நடைபெற்றது.  காலை 10.00 மணிக்கு இனிதே ஆரம்பிக்கப்பட்ட செயற்குழு கூட்டமானது மாலை 4.00 மணிவரை நடைபெற்றது.

மாநிலத்தலைவர் திரு.K.சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு திரு.P.சுப்பிரமணியன் மாநில பொதுச்செயலாளர், திரு.V.பிச்சை மண்டல அமைப்பாளர். தெற்கு மண்டலம் திரு.A.டேவிட்ராஜா மண்டல அமைப்பாளர் மேற்கு மண்டலம் திரு.K.முருகானந்தன் மண்டல செயலாளர் மேற்கு மண்டலம் திரு.K.கேசவன் மண்டல செயலாளர் தெற்கு மண்டலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.L.மகேஷ் மாநில துணைத்தலைவர், திரு.A.கிளெமெண்ட் எடிசன் தலைமை நிலைய செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். திரு.M.பாபு மாநில அமைப்பு செயலாளர் அவர்களால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட்டது. திரு.கு.அழகிரிசாமி மாவட்டப் பொருளாளர் ஈரோடு மாவட்டம் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

கூட்டத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு 

1. சீருடைப்பணியாளர்களின் எண்ணிக்கை

வனத்துறையில் உள்ள சீருடைப்பணியாளர்களின் எண்ணிக்கை தற்போதைய சூழ்நிலைக்கேற்றவாறு உயர்த்தப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பணியின் தன்மை தற்போது இல்லை. வனக்குற்றங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் போன்றவற்றிற்கு ஏற்றாற்போல்  சீருடைப்பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் உயர்த்தப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். தற்போதைய காலகட்டத்தில் வனக்குற்றங்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டும் நடைபெறவில்லை. வன உயிரினங்களான மான், முயல், காட்டுப்பன்றி, மயில், உடும்பு, குரங்கு போன்றவை கிராமம் நகரம் என எங்கும் பரவிக்காணப்படுகிறது. பறவைகள் வேட்டை என்பது நகரப்பகுதி, மாநகரப்பகுதி என பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. சீருடைப்பணியாளர்கள் பொதுவாக வனத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். வனத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் வனக்குற்றங்கள் நிகழ்கின்றது. எனவே ஒவ்வொரு தாலுக்காவிலும் ஒரு வனச்சரகம் அமைத்து சீருடைப்பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வனக்குற்றங்கள் நடக்காமல் தடுக்கவேண்டும் என்றும் நீதிமன்ற வழக்குகளை கையாள்வதற்கு தனியாக பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் எனவும் மனித வன உயிரின மோதல் அதிகம் உள்ள இடங்களில் உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து சுழற்சி முறையில் பணி மேற்கொள்ள ஏதுவாக பணியாளர்களை நியமனம் செய்யவேண்டும் எனவும்  எடுத்துரைத்தனர்.



No comments:

Post a Comment