நிலப்பனை (Curculigo orchioides)

நிலப்பனை Curculigo orchioides

ஆங்கிலத்தில் golden eye-grass என அழைக்கப்படும் நிலப்பனையின் தாவரவியல பெயர் Curculigo orchioides  ஆகும். இது ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும். இந்தச் செடியின் கிழங்கை மருந்தாக பயன்படுத்துவர். நிலைப்பனங்கிழங்கை முறைப்படி உபயோகித்தால் பல பயன்கள் உண்டு. ஆண்மைக்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் சிறந்த மருந்து ஆகும். ஆண்மலடு, பெண்மலடு போன்ற குறைபாடுகளைப்போக்கும். உடலுக்கு பலம் தரும்.

நிலப்பனைக்கிழங்கு தாவரம் குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. இத்தாவரம் 10 முதல் 35 செ.மீ வரை வளரக்கூடியது. இலைகள் ஈட்டி வடிவமானது. பூக்கும் காலம் வரும்போது அடிப்பகுதியில் தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கிறது. எனவே ஆங்கிலத்தில் golden eye-grass என அழைக்கப்படுகிறது.
                                                            நிலப்பனை தாவரம்
 

நிலப்பனையினை நாம் வீட்டிலும் வளர்க்கலாம். இத்தாவரமானது தரிசு நிலங்களில் இயற்கையாகவே காணப்படும். நிலப்பனைக்கிழங்கு கருப்பு நிறத்தில் காணப்படும். தோலை நீக்கினால் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த கிழங்கை நன்றாக சுத்தம் செய்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
                                                         நிலப்பனை கிழங்கு
 


இத்தாவரத்தின் வேர் மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேரானது சோர்வு, இரத்த தொடர்பான கோளாறுகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இத்தாவரத்தின் வேர் மூச்சுக்குழாய் அழற்சி, கண் அழற்சி, அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி நோய், நாய்க்கடிநோய், மூட்டுவலி, இரைப்பை குடல் வலி, பாலுணர்வு, காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

No comments:

Post a Comment