இடமாற்றப் பயணப்படி (T.T.A)

இடமாற்றப் பயணப்படி (Transfer T.A)

பொது

1. தலைமையிடத்திலிருந்து 8 கி.மீ க்கு அதிகமாக உள்ள இடத்திற்கு ஒருவர் மாற்றப்பட்டால் இடமாற்றப் பயணப்படி கிடைக்கும். இதற்கு குறைவான தூரமிருந்தால் இடமாற்றப் பயணப்படி கிடைக்காது. 

2. அரசு ஊழியரும், குடும்பத்தினரும் ஒரே நாளில் செல்லாமல் மாறுபட்ட நாட்களி்ல் பயணம் செய்யலாம். புதிய இடத்தில் பணி ஏற்ற நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள் குடும்பத்தினர் புதிய இடம் செல்லலாம். அதற்கான பயணப்பட்டியல் பயணம் செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் (90 நாள் அல்ல) கொடுக்கப்படவேண்டும். (Note 1 under Art 54, TNFC 1)

3. இடமாற்றப்பயணப்படி என்பது உண்மையாக செலவு செய்யப்பட்டத் தொகையை திரும்பப்பெறுவது ஆகும். அது ஒரு வருமானம் அல்ல

விடுப்பு முடிந்து பணிஏற்றால் கிடைக்கும் இடமாற்றப்பயணப்படி

ஆறு மாதத்திற்கு குறைவான விடுப்பிலிருந்து ஒருவர் பணிஏற்றால், இடமாற்றப்பயணப்படி கிடைக்கும். பணியிலிருந்து விடுபட்ட நாளிலிருந்து ஆறுமாதம் விடுப்பு கணக்கிடவேண்டும்.

இடமாற்றப் பயணப்படி பட்டியல் ஒவ்வொரு பிரயாணம் முடிவுற்றவுடன் 3 மாதங்களுக்குள் அனுப்பப்படவேண்டும். அரசு ஊழியர், குடும்பம், வீட்டு சாமான்கள் புதிய தலைமையிடத்திற்கு தனித்தனியாக செல்லும் தேதிகளிலிருந்து கணக்கிடவேண்டும். (Note 1 under Art 54 TNCF Vol. 1)


இடமாற்றப் பயணப்படியாக கிடைக்கும் தொகை
1) இரயில் / பேருந்து கட்டணம்
2) அரசு ஊழியருக்கு மட்டும் இரண்டு Incidental Charges (பயணநேரம் கணக்கல்ல)
3) குடும்பத்தினர் மற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் Flat Rate மற்றும் தினப்படி
4) வீட்டுச்சாமான்களை புதிய இடத்திற்கு எடுத்துச்செல்வதற்கான செலவு
5) Lump Sum தொகை
6) வேலையாளுக்கு இரண்டாம் வகுப்பில் இரயில் / பேருந்து கட்டணம் (தினப்படி கிடைக்காது)
7) வாகனம் எடுத்துச்செல்வதற்கான செலவு
முதலியவை கிடைக்கும்.

இடமாற்றப்பயணப்படிக்கு தகுதியான குடும்ப உறுப்பினர்கள்
மனைவி, அரசு ஊழியரைச் சார்ந்துள்ள மகன் மற்றும் மகள் (வயது வரம்பு கிடையாது), தத்தெடுத்த மகன் மற்றும் மகள், மாற்று மகன் / மகள், அரசு ஊழியரை முழுவதுமாக சார்ந்துள்ள விதவை மகள், பெற்றோர், பெண் அரசு ஊழியரை முற்றிலுமாக சார்ந்துள்ள கணவன் ஆகியோர் இடமாற்ற பயணப்படிக்கு தகுதி உடையவர் ஆவர். பயணப்படி விதி 2(IV)

குடும்ப உறுப்பினர் புதிய இடம் செல்வது(விதி 76)
குடும்ப உறுப்பினர் அரசு ஊழியரோடு புதிய இடத்திற்கு பயணம் செய்யலாம். அல்லது பழைய இடத்தில் விடுபட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் செல்லலாம் அல்லது புதிய இடத்தில் பணி ஏற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள்ளும் புதிய இடம் செல்லலாம்.

குடும்ப உறுப்பினர் புதிய ஊர் தவிர வேறு ஊருக்கு செல்வது
குடும்ப உறுப்பினர் புதிய ஊர் தவிர வேறு ஊருக்கும் பயணம் செய்யலாம் அல்லது வேறு ஊரிலிருந்து புதிய இடத்திற்கும் வரலாம்  இப்படி பயணம் செய்தாலும் குடும்ப உறுப்பினருக்கு இட மாற்ற பயணப்படி கிடைக்கும்.

கணவன் மனைவி இருவரும் மாற்றப்பட்டால்
கணவன் மனைவி இருவரும் ஆறு மாதத்திற்குள் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டால் ஒருவருக்கு மட்டுமே இட மாற்ற பயணப்படி கிடைக்கும். வேறு வேறு ஊருக்கு மாற்றப்பட்டால் இருவருக்கும் பயணப்படி கிடைக்கும்.

தினப்படி (விதி 70)
அரசு ஊழியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பயண நேரத்தை கருத்தில் கொள்ளாமல் 24 மணிநேரப் பயணம் வரை முழு தினப்படி வழங்கப்படும் 24 மணிக்கு அதிகமானால் ஒரு தினப்படியும் 24 மணிக்கு அதிகமாகும் நேரத்திற்கு கூடுதல் தினப்படியும் வழங்கப்படும். 12 வயது நிறைவு செய்யாதவர்களுக்கு அரை தினப்படி கிடைக்கும். எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் தினப்படி கிடைக்கும் வாகனத்திற்கும் தினப்படிக்கும் சம்பந்தமில்லை.






No comments:

Post a Comment