சாம்பல் நிற அணில் (Grizzled giant squirrel)


சாம்பல் நிற அணில்
Grizzled giant squirrel

The grizzled giant squirrel (Ratufa macroura) is a large tree squirrel in the genus Ratufa found in the highlands of the Central and Uva provinces of Sri Lanka, and in patches of riparian forest along the Kaveri River and in the hill forests of Karnataka, Tamil Nadu and Kerala states of southern India. The International Union for Conservation of Nature (IUCN) lists the species as near threatened due to habitat loss and hunting.


Grizzled Squirrel Wildlife Sanctuary is located in Shenbagathoppu, Srivilliputtur, Tamil Nadu, India.


Grizzled giant squirrels are named for the white flecks of hair that cover their greyish-brown bodies, giving them a grizzled look.


Ratufa macroura is the smallest of the giant squirrels found in the Indian subcontinent, with a head and body length of 25 to 45 centimetres (9.8 to 17.7 in), and tail measuring roughly the same or more, for a total length of 50 to 90 centimetres (20 to 35 in). It has small rounded ears with pointed tufts. The home range of an individual is between 1,970 and 6,110 square metres.

Hands are normally pentadactylous, with four digits and a rudimentary thumb. Fingers have large broad soft pads, where the inner pad is expanded for gripping while moving through branches. Feet are also comprised with soft pads with both fore and hind limbs possessing long, sharp claws.


In India, Ratufa macroura has been recorded from Grizzled Squirrel Wildlife Sanctuary, Theni Forest Division, Palni Hills, Chinnar Wildlife Sanctuary, Anaimalai Tiger reserve, Sirumalai, Thiruvannamalai Forest Division of the Eastern Ghats, Hosur Forest Division and Cauvery Wildlife Sanctuary.

Ratufa macroura are known to eat fruits, nuts, insects, bird eggs, and the bark of some trees. The fruit of the climber Combretum ovalifolium is an especially important food source where it occurs. Young squirrels, upon first emerging from the nest, have been observed to feed exclusively on this fruit.


The species is almost entirely an arboreal, very rarely coming to the ground to escape from predators, to flee from an intruder, attack males of the territory, and connecting with females. Their vision is good, which aids them in detecting predators. Their sense of hearing is relatively poor.

Unlike its relatives, the giant squirrel balances using its two hind feet, instead of its tail.


The call is staccato and loud with repeated shrill cackle. It is usually uttered in morning and evening. A low "churr" is also used to communicate with nearby groups.


According to Mammals of Sri Lanka, the three subspecies are identified as follows:

    Ratufa macroura macroura

Males are 35 cm long and females with 37 cm. Tail is 37 cm long in males and 38 cm in females. Jet black dorsal area with a sheen. Rump with white grizzling appearance. Underparts brownish creamy to pale yellow. Tail is with dark black fur with white tip. Face has pink color in naked areas. Fur moderately long with few coarse hairs. Geographically, this subspecies is restricted to central highlands up to 2000m, such as Horton Plains.

    Ratufa macroura dandolena

Males are 37 cm long and females 35 cm. Tail varies from 37 cm in males and 40 cm in females. Males are larger than females. Dorsal surface is brown instead of jet black in subsp. macroura. White rump. Distinct maroon tinge between shoulders. There is a brownish cream crown patch. Underparts are light brownish cream. Tail is dark brown and there is a reddish-brown tip. Fleshy parts of face are pink. Fur moderately long and coarse. Inhabit dry zone parts of the island, as well as India.

    Ratufa macroura melanochra

Males are 35 cm long and females 37 cm. Tail varies from 37 cm in males and 38 cm in females. Upperparts are jet black with contrasting color variation with creamy yellowish ventral surface. Fur is shorter and coarser. Found in low country wet zone, and intermediate zones of the country.



சாம்பல் நிற அணில்
சாதுவான சாம்பல் நிற அணில்



சாம்பல் நிற அணில் என்பது ஆங்கிலத்தில் Ratufa macrouraஎன்று அழைக்கப்படுகிறது. இது தற்போது அழிந்து வரும் இனமாக கருதப்படுகிறது. எனவே 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி இந்த உயிரினத்தை வேட்டையாடுவது குற்றமாகும்.

சாம்பல் நிற அணில் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு விளங்கி வருகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூர்  காப்புக்  காட்டை  ஒட்டியுள்ள செண்பகத் தோப்பு என்பது அங்கே உள்ள பெருமைமிகு ஆண்டாள் திருக் கோவிலுக்குச் சொந்தமான பகுதி. அங்கே மா, பலா, கொய்யா என்று பல்வேறு பழ மரங்களை  நட்டு வளர்த்து வருகின்றனர்.



சாம்பல் நிறப் பெரிய அணில்  (Grizzled Giant Squirrel) உருவத்திலும், எடையிலும் இந்தியப் பெரிய அணிலை (Indian Giant Squirrel) விடச் சிறியவை. சாம்பல் நிற முதுகுப் பகுதி, இளஞ்சிவப்பு மூக்கு, பெருத்தவயிறு, முடிகளால் சூழப்பட்ட உடல் மற்றும் அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால் ஆகிய உடல் கூறுகளோடு இது விளங்கும். இவை குட்டி போட்டுப் பால் கொடுக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. ஆண்டுக்கு ஒரு குட்டி ஈனும். தலை முதல் வால் வரை சுமார் இரண்டரை அடி நீளம் இருக்கும். சுமார் 14 ஆண்டுகள் உயிர் வாழும்.

இந்த அணில்கள் புளி, மா, கொய்யா, போன்ற பழ வகைகளையும், அவை கிடைக்காத நேரங்களில் புளி, வாகை, உசில், நாவல், நீர்மருது, தானி, வேம்பு, மா ஆகிய மரங்களின் இளந்தளிர்களையும், மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்ளும்.

இவ்வகை அணில்கள் மலை அடிவாரங்களில் உள்ள காடுகளிலும், அவற்றை ஒட்டியுள்ள மாந்தோப்புகளிலும், ஆற்றுப் படுகைகளில் வளர்ந்திருக்கும் புளிய மரங்கள் மீதும் ஓனான் கொடிகளைக் கொண்டும், காய்ந்த குச்சிகளைக் கொண்டும் கூடு கட்டி வாழ்கின்றன. ஒவ்வொரு அணிலும் இரண்டு கூடுகளைக் கட்டும். ஒன்றைக் குட்டிகளைப் பாதுகாத்து வளர்த்திடவும், மற்றொன்றை உறங்கி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தும். இரண்டு மணி நேரத்தில் ஒரு கூட்டினைக் கட்டிவிடும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இவை  இரை தேடிக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும். மதிய நேரத்தில் மரக்கிளைகள் மேல் படுத்து ஓய்வெடுக்கும். இவை பொதுவாக மரங்களின் உச்சியிலே வாசம் செய்யும். மிக அரிதாகவே தரைக்கு வரும். இவை ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவிச் செல்லும். ஒரு தடவையிலேயே சுமார் 20 அடி தூரம் தாண்டும்.

இப்படி சாதுவாக வாழ்கின்ற சாம்பல் நிற அணில்களுக்கும் இயற்கையில் சில எதிரிகள் உள்ளன. பருந்து, கழுகு போன்ற பறவைகள் இந்த அணில் குட்டிகளைத் தூக்கிச் சென்று விடும். இது போன்ற சமயங்களில் மற்ற அணில்கள் ஒன்று சேர்ந்து அச்சமூட்டும் வண்ணம் ஒருவித சப்தத்தை பலத்த ஓசையுடன் எழுப்பி எதிரிகளை விரட்ட முற்படும்.

கடந்த 1989 ஆம் ஆண்டு சாம்பல் நிற சரணாலயம் அறிவிக்கை செய்யப்பட்டு, விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளையும், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த வனப்பகுதிகளையும் ஒருங்கிணைத்து, தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்து விரிந்து அமைந்துள்ளது. அதன் பிறகு புளி, மா, வேம்பு, நாவல் போன்று இந்த அணில்களுக்கு உணவாக விளங்கும் சிறு வன விளைபொருட்கள் ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது. சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கையில் அதிகரித்து தற்போது சுமார் தொள்ளாயிரத்துக்கும் அதிகமாக  இங்கே காணப்படுகின்றன.

No comments:

Post a Comment