ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரம் (October 2 to October 8) வனஉயிரின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனங்களையும்,வன உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்த வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்கு பாதுகாப்பு அவசியம். மரங்கள் மற்றும் தாவரங்களின் பெருக்கத்திற்கும் தட்ப வெப்ப நிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
அழியும் நிலையில் வன உயிரினங்கள்
கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங்களும் 140 பறவையினங்களும் அழிந்துள்ளதாக தெரியவருகிறது. தற்போதைய கணக்கெடுப்பின் படி மேலும் சுமார் 300 இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன.
பெங்குவின், புள்ளிமான், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், யானை, சிங்கம், கரடி, புலி, காட்டெருமை, முதலை, பாம்பு, மயில், சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில சிற்றினங்கள்(Species) அடியோடு அற்றுப் போகும் நிலையில் உள்ளன.
அமிர்தி உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரவிழா
வன உயிரின வாரவிழா 2024 இவ்வருடம் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூர் வனக்கோட்டம், அமிர்தி உயிரியல் பூங்காவில் மாவட்ட வன அலுவலர் திரு.குருசுவாமி தபாலா I.F.S அவர்களின் வழிகாட்டுதல்படி 02.10.2024 ஆம் தேதி வன உயிரின வார விழாவை முன்னிட்டு உயிரியல் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர் திரு.S.மணிவண்ணன் அவர்கள் கலந்துகொண்டு ஜெயம் வித்யாலயா கல்வி நிறுவனத்தைச்சேர்ந்த ஆசிரிய பெருமக்களிடையே வன உயிரினங்கள் பற்றியும் குறிப்பாக புலிகள் பற்றிய அவசியம் குறித்து கலந்துரையாடினார்.
அன்றைய தினம் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள் உயிரியல் பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். மாணவச்செல்வங்களிடையே வன உயிரினங்கள் பற்றியும் வனத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் அவற்றின் அவசியம் குறித்தும் வனச்சரக அலுவலர் திரு.A.S.தரணி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வனவர்கள் திரு.R.ஆனந்தசெல்வகுமார், திருமதி.S.ஜெகஜோதி வனக்காப்பாளர்கள் திரு.S.ஸ்ரீவெங்கடேஷ் திரு.G.ஏழுமலை திரு.C.சத்தியராஜ் திரு.C.ஜீவா மற்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment