வனத்துறை என்பது வனம் மற்றும் அதனைசார்ந்த பகுதிகளை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செய்ய ஏதுவாக வனச்சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு இயற்றப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வனச்சட்டம் 1882 (5/1882) இல் முகப்புரையில் "தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காடுகளை பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் அவசியமாக இருப்பதால் இச்சட்டம் இயற்றப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வனத்துறையில் நிர்வாக காரணங்களுக்காகவும், பாதுகாப்பு பணியை மேம்படுத்தவும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒரு அங்கம் தான் வனப்பாதுகாப்பு படை என்பது. வனப்பாதுகாப்பு படை என்ற பெயரிலேயே பாதுகாப்பு என்ற சொல் உள்ளது. எனவே இவர்கள் பணியும் வனத்தை பாதுகாப்பது என்பது தெரிகிறது. வனப்பாதுகாப்பு படையினர் தற்போதைய சூழலில் பொதுவாக எந்த மாதிரியான பணியினை செய்கிறார்கள் என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
வனப்பாதுகாப்பு படையினர் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு பணிக்கு உதவுவதும், குற்றங்களை கண்டுபிடிக்கவும் உதவுகின்றனர். ஆனால் அது மிகவும் சொற்பமானதாகவே உள்ளது பெரும்பாலான இடங்களில் வனப்பகுதியில் சென்று குற்றம் நடந்துள்ளது என உயர் அலுவலர்களுக்கு அறிக்கை செய்கிறார்கள். வனப்பகுதிக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களை அழைத்துச் சென்றால் குற்றம் கண்டுபிடிப்பதிலும் குற்ற எதிரி யாராவது இருந்தால் அவர்களை அடையாளம் காணவும் உதவியாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குற்றம் நடந்துள்ளது என்றும் எந்த இடம் என்பதை தோராயமாக கூறும் வனப் பாதுகாப்பு படையினர் குற்ற சம்பவம் நடந்த இடத்தை பல நேரங்களில் துல்லியமாக கூறுவதும் இல்லை. குற்ற எதிரி விபரமும் கூறுவதில்லை. அறிக்கை செய்வதில் கவனம் செலுத்தும் வனப்பாதுகாப்பு படையினர் குற்ற எதிரியை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துவது இல்லை.
வனப்பாதுகாப்பு படையினர் ரகசியல் தகவல் அடிப்படையில் சென்று குற்ற சம்பவம் நடந்த இடத்தை கண்டுபிடித்ததாக அறிக்கை செய்கின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் குற்றச்சம்பவம் நடந்த இடத்தை அறியும்போது குற்ற எதிரியின் விபரம் மட்டும் ரகசிய தகவலில் கிடைக்காமல் போவது எப்படி என்கிற இயல்பான சந்தேகம் எழுகிறது. அவர்களின் எந்தவொரு அறிக்கையிலும் குற்ற எதிரியின் விபரம் இருப்பதில்லை. ஒருசில இடங்களில் ரகசிய தகவலுக்கு அரசால் சன்மானமும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment