புதிய காப்பீட்டுத் திட்டம் 2021 (NHIS 2021)

 அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் 2021

National Health Insurance Scheme 2021

அ்ரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு அதற்கான காப்பீட்டுத்தொகை ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத்திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

மருத்துவ காப்பீட்டு வசதியானது 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான நான்கு வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படுகிறது. 

இணைப்பு 1 (Annexure I - Page Number 29) இல் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 5,00,000 (ஐந்து லட்சம்) வரை வழங்கப்படும். (List of Approved treatments and surgeries classified under the broad based specialities) 

இணைப்பு 1அ (Annexure I A - Page Number 36) வில் வகைப்படுத்தப்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10,00,000 (பத்து லட்சம்) வரை வழங்கப்படும். (List of Specified Illness for the enhanced limit of Rs.10.00 Lakh) 

இதற்கான காப்பீட்டு சந்தா ரூ.300 ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

இணைப்பு 2 (Annexure II - Page Number 37) இல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. (List of approved hospitals under NHIS 2021 Districtwise)

இணைப்பு 6 (Annexure VI - Page Number 161) இல் கொடுக்கப்ட்டுள்ள படிவத்தை (Form) பூர்த்தி செய்து உரிய அலுவலர்களிடம் அளித்து புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்திற்கான அட்டையை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அரசாணை GO Ms No 160 Finance (Salaries) Department    Dated : 29.06.2021 (இணைப்புக்கள் மற்றும் அனைத்து விபரங்களுடன் கூடியது)

 காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

Re - imbursement Letter

மருத்துவமனை நிர்வாகம் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உரிய தொகையினை பெற்றுத்தராத சந்தர்ப்பங்களிலும், மருத்துவ சிகிச்சைக்கு செலவிடப்பட்ட தொகையை விட குறைந்த அளவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும் சந்தர்ப்பங்களிலும் மற்றும் தவிர்க்க முடியாக அவசர நேரங்களில் இணைப்பு 2 (Annexure II) -இல் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களிலும் அரசு ஊழியர்களால் செலவிடப்பட்ட  தொகையினை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதற்கான படிவத்தை காண்பதற்கு 





No comments:

Post a Comment