Leopard at Thalamalai - Mysore Road

சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் இரண்டு மாலைவேளையில் ஒன்றுடன் ஒன்று மகிழ்ச்சியுடன் தலமலை  மைசூர் சாலை 5 வது கொண்டைஊசி வளைவில் விளையாடிய காட்சியை காண
இங்கு கிளிக்செய்யவும்

பொதுமக்கள் வன உயிரினங்களை நேரில் பார்க்கும்போது அமைதியாக அதற்கு எவ்வித இடையூறும் செய்யாமல் ஒதுங்கிச்செல்லவேண்டும். ஆனால் பெரும்பாலும் ஆர்வமிகுதியின் காரணமாக சத்தமிடுவதாலும் ஒலி எழுப்புவதாலும் வனஉயிரினமானது தன்னை தாக்க வருகிறார்களோ என்று எண்ணி கோபம் கொண்டு பொதுமக்களை தாக்க முயல்கின்றன. எனவே சில சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுகிறது.

எனவே நாம் வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும். மேற்காணும் வீடியோவில் பலர் சத்தம் எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட முயல்கின்றனர். சத்தம் கேட்டு அவை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. ஒருவேளை அவை பொதுமக்கள் இருக்கும் திசையில் ஓடிவந்திருந்தால்.....

எனவே நாம் தான் வனத்தையும் வன உயிரினங்களையும் புரிந்துகொண்டு அவற்றை பாதுகாக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment