விழுப்புரம் மாவட்டம்

மரக்கன்றுகள் நடுதல்

23.10,2016 அன்று விழுப்புரத்தில் உள்ள நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டம் மற்றும் பல அலுவலர்களால் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது மரம் நடவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. எனவேதான் திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளின்போது மரக்கன்றுகள் இலவசமாக கொடுப்பதும், மரக்கன்றுகள் நடுவதும் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கிறது. 


நாம் நமது சந்ததியினருக்கு எதை சேமித்து வைக்கிறோமோ இல்லையோ நல்ல சுற்றுச்சூழலை உண்டாக்கி வைக்கவேண்டும். நல்ல காற்றை, தண்ணீரை விட்டுச்செல்லவேண்டும். நல்ல சுத்தமான காற்றிற்கு மரம் வேண்டும். மழைக்கு மரம் வேண்டும். எனவே மரம் வளர்ப்பது என்பது நம் நாட்டை வளர்க்கிறோம். நம் சந்ததியினரை வளர்க்கிறோம். வளமான வாழ்விற்கு ஆதாரத்தை வளர்க்கிறோம்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய கவிதை ஒன்றில் மரங்களைப்பற்றி குறிப்பிடும்போது மனிதனின் முதல் நண்பன் மரம் என்றும் மரத்தின் முதல் எதிரி மனிதன் என்றும் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான் என்றும் குறிப்பிடுகிறார். எனவே நாம்  இனிவரும் காலங்களில் மரங்களை நேசித்து வளர்க்கவேண்டும்.போட்டோக்கள்
No comments:

Post a Comment