Supply of Shoe/Torch Light/Raincoat

Shoe - Torch Light - Raincoat

 வனத்துறையில் பணிபுரியும் சீருடைப்பணியாளர்களின் நலன் கருதி சீருடைப்பணியாளர்களுக்கு காலணி (Shoe), மழை அங்கி (Rain Coat) மற்றும் கைவிளக்கு (Torch Light) உள்ளிட்டவை வழங்கவேண்டும் என தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பி அதற்கான அரசாணை அரசால் வெளியிடப்பட்டது. 

அரசாணையினை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

GO Ms No 173 Environment and Forests (FR-2) Department Date : 23.10.2013

மேற்காணும் அரசாணையின்படி காலணி (Shoe) மற்றும் கைவிளக்கு (torch Light)  ஒவ்வொரு வருடமும்  மழை அங்கி (Rain Coat) நான்கு வருடத்திற்கு ஒரு முறையும் வழங்கப்படவேண்டும். 2013 ஆம் ஆண்டில் மழை அங்கிக்கான தொகை ரூ.800 எனவும் காலணிக்கான தொகை ரூ.595 எனவும் கைவிளக்கிற்கான தொகை ரூ.150 எனவும் வழங்கப்பட்டது. இந்த தொகையானது மழை அங்கிக்கு  ரூ.1000 எனவும் காலணிக்கு ரூ.975 எனவும் கைவிளக்கிற்கு ரூ.165 எனவும் மாற்றியமைக்கப்பட்டு அதற்கான அரசாணை 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

அரசாணையினை காண்பதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

GO Ms No 136 Environment and Forests (FR 2-I) Department  Date: 25.10.2018

இச்சலுகையினை பெற தொடர் முயற்சி எடுத்த தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 



No comments:

Post a Comment